MARC காட்சி

Back
முதலை குளம்
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a முதலை குளம்
510 : _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
520 : _ _ |a இந்தப் பெருங்குளம் வேம்பிற்றூர் ஊரவையினரால் செய்யப்பட்டது என்பது இதன் பொருளாகும். பாடபேதம்- வேம்பிற் ஊற் பேர்அய்அம் சேதவர் - சிரோமணி, ஜெயராஜன், செம்பிறைஊர் பேர்அய்அம் சேதவர் - இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கை 1978-79. அயம் என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. இங்குக் குகை போன்ற அமைப்பு நீர்தேக்கி வைக்கும் இடம் என்று கொண்டால் நீர், சுனை, பள்ளம், குளம் என்று தமிழ்ப்பேரகராதி சுட்டும் சொற்பொருள்கள் ஏற்புடையவை ஆகின்றன. இக்கல்வெட்டுள்ள சின்ன உண்டாங்கல்லு மலையை அடுத்து முதலைகுளம் என்ற ஊர் குளத்தின் பெயரால் இருப்பதாலும் அவ்வூரில் சுமார் 2 கி.மீ சுற்றளவில் ஒரு பெரிய குளம் இருப்பதாலும் இக்கல்வெட்டிலுள்ள 'அயம்' என்ற சொல்லுக்குக் 'குளம்' எனப் பொருள் கொண்டு ‘பேர்’ ‘அயம்’ என்ற சொல்லுக்குப் பெருங்குளம் என்று பொருள் கொள்ளலாம். வேம்பிற் ஊர் என்ற சொல்லில் வேம்பில் என்பது ஊர்ப்பெயரையும் ஊர் என்ற பின்னொட்டு அவ்வூரின் ஊரவையையும் சுட்டுவதாகக் கருதுவர். சங்கப் பாடல்களில் புறநானூற்றுப் பாடல் 317ஐப் பாடிய குமரனாரும். குறுந்தொகையில் 362ஆவது பாடலைப் பாடிய கண்ணன் கூத்தனாரும் வெம்பில் ஊரினராகக் கருதப்படுவர். நம்பி திருவிளையாடலைப் பாடிய செல்லிநகர்ப் பெரும்பற்றப்புலியூர் நம்பியும் மதுரைக் கோவையைப் பாடிய சங்கரநாராயணரும் சிராமலை அந்தாதியைப் பாடிய வேம்பையர் கோன் நாராயணனும் இவ்வூரைச் சேர்ந்தவர்களாகலாம். பாண்டிய நாட்டில் மதுரைக்கு வடகிழக்கில் வைகை நதிக்கு வடக்கில் சிவகங்கை மாவட்டத்தில் இப்பெயரில் ஓர் ஊர் அமைந்துள்ளது. பெரிய சின்னமனூர் செப்பேட்டில் களவழி நாட்டு வேம்பற்றூர் என்ற பெயரில் ஓர் ஊர் சுட்டப்பட்டுள்ளது. ‘சேதவர்’ என்ற சொல்லைச் செய்தவர் என்ற சொல்லாகக் கொள்ளலாம்.
653 : _ _ |a சின்ன உண்டாங்கல்லு, இராக்கிப்புடவு குகை, உசிலம்பட்டி, தமிழ் பிராமி கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, மதுரை மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை
752 : _ _ |a சின்ன உண்டாங்கல்லு மலை - இராக்கிப்புடவு குகை |c முதலை குளம் |d மதுரை |f உசிலம்பட்டி
914 : _ _ |a 09°58’42"N
915 : _ _ |a 77°55’47"E
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_000039
barcode : TVA_INS_000039
book category : தமிழி / தமிழ்-பிராமி
cover :
Primary File :

TVA_INS_000039/TVA_INS_000039_முதலை-குளம்_குகைத்தளம்-001.jpg